திருநெல்வேலி மாநகரில் உள்ள பிரசித்தி பெற்ற காந்திமதி அம்மை உடனுறை சுவாமி நெல்லையப்பர் கோவிலில் நேற்று குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இதனை ஒட்டி கோவில் முன்பு அமைக்கப்பட்ட கொடிக்கம்பத்தில் திருக்கோவில் நிர்வாக அதிகாரி திரு.ராமராஜன் அவர்கள் தேசிய கொடியேற்றி வைக்க, யானை காந்திமதி தும்பிக்கையை தூக்கி மரியாதை செலுத்தியது.
அப்போது சிவாச்சாரியார் சிறப்பு பூஜை செய்து தேசியக்கொடிக்கு தீபாராதனை செய்தார். இதில் திரளான பக்தர்கள், கோவில் பணியாளர்கள் மற்றும் அர்ச்சகர்கள் கலந்து கொண்டனர்.