திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று 73 வது குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மாவட்ட நிர்வாகம் சார்பில் பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. விஷ்ணு அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்து காவல்த்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அதனை தொடர்ந்து மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 91 காவலர்களுக்கு முதல்வர் பதக்கங்களையும், 108 காவலர்களுக்கு நற்சான்றிதழ்களையும், பிற துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 222 ஊழியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும், பத்து பயனாளிகளுக்கு 4 லட்சத்து 42 ஆயிரத்து ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் ஆட்சித்தலைவர் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலைப்பண்பாட்டு துறை சார்பில் சிலம்பாட்டம் மற்றும் காவல்துறையினரின் யோகா நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றது.