திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டரங்கில், கோரிக்கைகள் மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்திட்டங்கள் தொடர்பாக பொதுமக்களுடன், மாநகராட்சி ஆணையாளர் திரு.விஷ்ணு சந்திரன் அவர்கள் காணொளி மூலமாக கலந்துரையாடினார். இந்த நிகழ்ச்சியில் பத்துக்கும் மேற்பட்ட நபர்கள் பங்கு கொண்டு தங்கள் கோரிக்கைகள் குறித்து கலந்துரையாடினர். இதில் மாநகராட்சியின் அனைத்துத்துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய திரு.விஷ்ணு சந்திரன் அவர்கள் வாரம்தோறும் வெள்ளிக்கிழமைகளில் இது போல பொதுமக்களுடன் காணொளி கலந்துரையாடல் நடைபெறும் என்றும், அதில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை தெரியப்படுத்தலாம் என்றும், மக்கள் தெரிவிக்கும் சிறிய அடிப்படை வசதி சம்மந்தப்பட்ட கோரிக்கைகளை இலக்காக வைத்து, அடுத்த ஒரு வாரத்திற்குள் அந்த கோரிக்கையின் மீது துரித நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.