தென்காசி மாவட்டம்., வாசுதேவநல்லூர் அருகே சாலை அமைக்கும் பணிக்காக மண் தோண்டப்பட்டது. அப்போது பூமிக்கு அடியில் இருந்து உருளை வடிவ கற்கள், பழங்கால மண்பாண்டங்கள், முதுமக்கள் தாழிகள், இரும்பால் செய்யப்பட்ட வில், குத்தீட்டி, வாள், கத்தி, செம்பினால் செய்யப்பட்ட பாத்திரங்கள் என ஏராளமான பழங்கால பொருட்கள் அடுத்தடுத்து கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து இந்திய தொல்லியல் துறை அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.