பெருமாளுக்கு மிகவும் உகந்த தினம் சனிக்கிழமை. சனிக்கிழமை அன்று பெருமாளை ஆராதனை செய்து வழிபாடு செய்தால் நம்முடைய வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பதற்கு பெருமாள் வழி கொடுப்பார். முக்கியமாக சனி பகவானின் சங்கடத்திலிருந்து பெருமாள் நம்மை காப்பாற்றுவார் என்பது ஐதீகம்.
சனிக்கிழமை அன்று விரதம் இருப்பவர்கள் அதிகாலை எழுந்து நீராடி நெற்றியில் திருநாமம் தரித்து ஓம் நமோ நாராயணாய நமஹ எனும் திரு மந்திரத்தை ஓதுதல் சிறப்பு
அன்று முழுவதும் சாத்வீகமான எளிமையான உணவை எடுத்துக் கொள்ள வேண்டும் .பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தல் சிறப்பு. பெருமாளுக்கு உகந்த துளசி மாலையை பெருமாளுக்கு அணிவித்தால் பெருமாளின் பரிபூரணமான அருள் நமக்கு கிடைக்கும்..
நாம் முதலில் தாயாரை பார்த்து விட்டு, பிறகு பெருமாளை பார்க்க சென்றால், நாம் செல்வதற்கு முன்பேயே, 'நம் குழந்தை வந்து இருக்கிறான். அவனுக்கு அணுக்ரஹம் மட்டுமே செய்யுங்கள்' என்று நமக்காக சிபாரிசு செய்து விடுவாள் தாயார்.
தாயாரை பார்த்து விட்டு, வரும் நம்மை, தாயாரின் சிபாரிசு கிடைத்ததால் 'நாம் கேட்பதை எல்லாம் கிடைக்க செய்து' அணுகிரஹம் செய்து விடுவார் பெருமாள். அதனால் முதலில் தாயரைப் பார்த்து வணங்கி விட்டு அடுத்த பெருமாளை தரிசிப்பது சிறப்பு.
திருப்பதியில் பெருமாள் நெஞ்சிலேயே தாயார் இருப்பதால், தாயாருக்கு திருமலையில் தனி சந்நிதி இல்லை.
சனிக்கிழமை தோறும் பெருமாளின் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்வது வீட்டில் ஸ்லோகங்கள் படிப்பது நம்முடைய வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும்.
பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வர். மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும். குழப்பமான மனம் தெளிவாகும். செல்வ செழிப்பு உண்டாகும். ஆரோக்கியம் சிறக்கும் . பெருமாளின் அனுகிரகம் பெற்று வாழ்க்கையில் நிறைவான பயன் காணுங்கள்.
Image source: dinakaran.com