செய்திக்குறிப்புகள்:
- நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் பெண்களுக்கான பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
- தாய்கேர் மையங்கள் மூலம் கர்ப்பிணிப் பெண்களின் உயிரிழப்பு குறைந்துள்ளது என்று மகளிர் ஆணையத் தலைவி ஏ .எஸ் .குமாரி அறிவிப்பு.
திருநெல்வேலி மாவட்டம் குழந்தை திருமணம் , பெண்களுக்கான பாதுகாப்பு, பெண் குழந்தைகள் பாதுகாப்பு ஆகிய அம்சங்கள் குறித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது .
ஆய்வுக் கூட்டத்தில் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத் தலைவி ஏ எஸ் குமாரி பங்கேற்று உரையாற்றினார்.
அப்பொழுது நிருபர்களிடம் அவர் தெரிவித்ததாவது;
நெல்லை மாவட்டத்தில் 'ஒன் ஸ்டாப் சென்டர்' என்று கூறப்படும் பெண்களின் பாதுகாப்பு மையம் மிகவும் சிறந்த முறையில் செயல்பட்டு வருகிறது. குடும்பப் பெண்களின் பிரச்சனைகளை கேட்டு அதற்கான தீர்வுகளும் இந்த மையம் கொடுத்து வருகிறது.
சென்ற வருடம் இந்த மையத்தின் மூலம் 1,000 பிரச்சனைகள் வந்தது. அத்தனை பிரச்சனைகளும் சரி செய்யப்பட்டு நல்ல முறையில் தீர்வு காணப்பட்டுள்ளது.
மேலும் அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் 'ஒன் ஸ்டாப் சென்டர்' பெண்கள் பாதுகாப்பு மையம் கொடுத்து வருகிறது .கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பொருட்களும் வழங்கி வருகிறது. ஊட்டச்சத்து பொருட்கள் மருத்துவ ஆலோசனைகள் மற்றும் கர்ப்பிணிகள் கண்காணிப்பு அனைத்தும் முறையாக கவனிக்கப்படுகிறது .
இதனால் கர்ப்பிணி தாய்மார்களின் உயிரிழப்பு குறைந்துள்ளது .
மகளிர் ஆணையத்திற்கு பெண்களின் பாதுகாப்பு குறித்த பல்வேறு மனுக்கள் அதிகமாக வருகிறது. அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
பத்து பெண்களுக்கு மேல் வேலை செய்யும் அரசுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்கள், ஜவுளி கடைகளில் 8 மணி நேரம் வேலை செய்யும் பெண்களுக்கு இடையே அரை மணி நேரம் ஓய்வு எடுப்பது இது போன்ற விஷயங்களும் முதல் அமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். என்று தெரிவித்தார் .
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யா , சமூக நல அலுவலர் தனலட்சுமி , ' ஒன் ஸ்டாப் ' பாதுகாப்பு மைய நிர்வாக அலுவலர் பொன்முத்து, சுகாதாரப்பணி துணை இயக்குனர் கிருஷ்ண லீலா, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அருள்செல்வி மற்றும் பலர் பங்கேற்க விழா சிறப்பாக நிறைவு பெற்றது.
Image source: dailydhanthi.com