செய்திக் குறிப்புகள்
- நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் நேரடி மேற்பார்வையில் யோகா தின விழா கொண்டாட்டம்
- அருங்காட்சியகத்தில் யோகா தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தபட்டன.
பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் நேரடி மேற்பார்வையில் போலீசார் நேற்று யோகாசனம் செய்தனர். அப்போது அவர்களுக்கு யோகா பயிற்சிகள் குறித்த விளக்கங்கள் அளிக்கப்பட்டது .
மாவட்ட முதன்மை நீதிபதி குமரகுரு தலைமையில் ,நெல்லை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில், நீதிபதிகள் , வக்கீல்கள் நீதிமன்ற அலுவலர்கள் கலந்து கொண்டு யோகா செய்தனர். யோகா பயிற்றுநர் பாலசுப்ரமணியம் யோகா பயிற்சி வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் செயலாளர் செந்தில் முரளி செய்திருந்தார் .
நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் யோகா தினத்தை முன்னிட்டு பெண்களுக்கான இலவச யோகா பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது
பேராசிரியை லீலாவதி யோகா பயிற்சியினை நடத்த…பயிற்சியில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் மற்றும் மகளிர் கலந்து கொண்டனர்.
இதை நெல்லை மாவட்ட சிவசத்திய வள்ளி தொடங்கிவைத்து யோகா கலையின் தொடங்கிய தோற்றம் வரலாறு மற்றும் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்த விதம் அனைவரையும் கவரும் விதமாக அமைந்தது.
நெல்லை மண்டல தபால் துறை பணியாளர்கள் அருங்காட்சியக வளாகத்துக்குள் நடத்திய யோகா பயிற்சியில் . நாகேந்திரன் எம்எல்ஏ, நயினார் நாகேந்திரன், கலந்து கொண்டனர்.
நெல்லை மாவட்ட ஜனதா கட்சி சார்பில் நெல்லை அருகே நாரணம்மாள்புரத்தில் நேற்று யோகா நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட தலைவர் தயா சங்கர் தலைமை தாங்க… நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ கலந்து கொண்டு யோகா பயிற்சி செய்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
யோகா பயிற்சி என்பது முதலில் கடினம் எனினும் , போகப்போக அப்பயிற்சி மிக எளிதாகி , உடலும் மனமும் திடமாகி, எதிர்கால வாழ்க்கை சாதகமாகி வெற்றிப் பாதையை நோக்கி நடக்கலாம் என்று உலக சிறப்பு யோகா தினமாகிய இன்று சிறப்புப் பதிவாக திருநெல்வேலி டுடே வெளியிடுகின்றது.
Image source: Dinamalar.com