செய்திக் குறிப்புகள்
- ஆயிரக்கணக்கான மாணவ மாணவியர் கலந்துகொண்ட சர்வதேச யோகா தினம் கொண்டாட்டம்.
- பாளையங்கோட்டை வ உ சி மைதானத்தில் சர்வதேச யோகா தினம் நேற்று கொண்டாடப்பட்டது.
அன்னையர் தினம், தந்தையர் தினம் , மகளிர் தினம், காதலர் தினம் என பல்வேறு தினங்கள் , நம் பாரம்பரிய வேரின் மணம் மறக்கக்கூடாது என்பதற்காக கொண்டாடப்பட்டாலும் உடலுக்கும் மனதுக்கும் திறன் அளிக்கக்கூடிய சர்வதேச யோகா தினம் என்பது நம்முடைய உடல், மன ஆரோக்கியத்திற்காக கொண்டாடப்படுகின்ற சிறப்பு தினம்.
இதை பறைசாற்றும் விதமாக ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்படும் சர்வதேச யோகா தினம் பாளையங்கோட்டை வ- உ-சி மைதானத்தில் உள்ள உள்விளையாட்டு அரங்கத்தில் நேற்று கொண்டாடப்பட்டது.
இந்திய அரசின் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு துறை அமைச்சகம் ,நேரு யுவ கேந்திரா , தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், நெல்லை மாவட்ட யோகாசன சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய இந்த விழாவில்
நேரு யுவகேந்திரா அதிகாரி ஞான சந்திரன் தலைமை தாங்க..யோகா சங்க செயலாளர் அழகேசன் ராஜா வரவேற்றார்.
மாநகர பேரிடர் மேலாண்மை தாசில்தார் செல்வன், நெல்லை மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜேஷ், நெல்லை மாவட்ட யோகாசன துணைத்தலைவர் சிவசங்கர் ஆகியோர் யோகா பயிற்சி தொடங்கி வைத்து, யோகா கலையின் அவசியம் குறித்தும் பல்வேறு பயிற்சிகள் குறித்தும் விளக்கம் அளித்தனர்.
பெரும் மகிழ்ச்சியோடு புன்னகை பூக்க உற்சாகத்துடன் மாணவ மாணவிகள் தங்கள் பெற்றோருடன் வந்திருந்த காட்சி யோகாவில் அவர்களுக்கு இருந்த ஆர்வத்தை எடுத்து காட்டியது.
தன்னார்வலர்கள் மற்றும் சில பள்ளிகளில் இருந்து மொத்தமாக மாணவ மாணவியர் கலந்து கொண்டு யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.
யோகாவில் பங்கேற்ற பள்ளிகளுக்கு சிறப்பு கேடயங்கள் வழங்கப்பட்டன.
Image source: Dailythanthi.com