செய்திக்குறிப்புகள்:
- திருநெல்வேலி மாவட்டம் ஆசிரியர் மாணவர்கள் வருகை இணைய வழியில் பதிவு செய்யும் திட்டம் அரசு பள்ளிகளில் கொண்டுவரப்பட்டது.
- திங்கள்கிழமை முதல் தங்கள் வருகையை ஆசிரியர்கள் இணைய வழியில் பதிவு செய்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் திங்கட்கிழமை முதல் அரசு பள்ளிகளில் ஆசிரியர் மாணவர்களின் வருகை இணைய வழி பதிவு செய்யும் திட்டம் அமிலுக்கு வந்தது.
டி என் ஸ்கூல்ஸ் கைப்பேசி செயலி என்ற என்ற இணைய வழியின் பதிவாக்கம், பள்ளிக்கல்வித்துறை மூலமாக சென்ற 2019 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. கொரோனா காரணமாக இணைய வழியில் பதிவு செய்யும் திட்டம் முழுமையாக செயல்படாமல் இருந்து வந்தது.
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள், மாணவர்கள் சரியான நேரத்தில் வருவதை கண்காணிக்கும் வகையில் அமைக்கப்பட்ட இந்த இணைய வழி பதிவு செய்யும் திட்டம் இப்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
திங்கட்கிழமை முதல் இணைய வழியில் பதிவு செய்யும் முறை அமுலாக்கத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த செயலியில் வருகை, வருகையின்மை, விடுமுறை காரணம் உள்ளிட்டவற்றை பதிவு செய்யும் வகையில் உள்ளது. இதன் மூலம் அனைத்து பள்ளிகளின் ஆசிரியர் , மாணவர்கள் வருகை பற்றிய தகவல்கள், , பள்ளி கல்வித்துறை உயர் அதிகாரிகள் கண்காணிக்கும் வகையில் செயல் ஆக்கப்பட்டுள்ளது.
திங்கட்கிழமை திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஆசிரியர்கள் தங்களுடைய வருகையை இணையதளத்தில் பதிவு செய்தனர்.
Image source: tamil.news18.com