செய்திக்குறிப்புகள்:
- நெல்லை மாவட்டம் முக்கூடலில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி , அசோக காலச்சக்கரம் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
- 75வது சுதந்திர தின பவள ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு நடந்த விழாவில் சேரன்மகாதேவி சாரா ஆட்சியர் ரிஷாப் தலைமை தாங்கினார்.
நெல்லை மாவட்டம் முக்கூடல் தாய்வீடு தொண்டு நிறுவனம் சார்பில் அரங்கநாயகிபுரம் அணைக்கட்டு பகுதியில் மரக்கன்று நடும் விழா நிகழ்ச்சி திங்கட்கிழமை அன்று நடைபெற்றது.
75வது சுதந்திர தின பவள ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு இந்த விழா நடைபெற்றது. சேரன்மகாதேவி சார் ஆட்சியர் ரிஷாப் தலைமை தாங்கினார்.
ஆதரவற்ற முதியோர்கள், சாலை பணியாளர்கள், சொக்கலால் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் , பாதசாரிகள் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் காவல் உதவி ஆய்வாளர் ஏ. ஆல்வின், வியாபாரிகள் சங்கத் தலைவர் பூமி பாலக பெருமாள் , கிராம நிர்வாக அலுவலர் பொன் பாண்டியன், ஆசிரியர் சிவன் பாண்டி , பொழில் அறக்கட்டளை தலைவர் ஹென்றி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
Image source: tamil.news18.com