திருநெல்வேலி மாநகரில் உள்ள பிரசித்தி பெற்ற காந்திமதி அம்மை உடனுறை சுவாமி நெல்லையப்பர் திருக்கோவிலில் நேற்று நவக்கிரக சன்னதியில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இங்கு நவக்கிரக சன்னதியில் உள்ள சந்திரன் திருக்கரத்தின் மலர் மொட்டு சிதிலம் அடைந்திருந்த நிலையில், அதனை சீரமைக்க பக்தர்கள் தொடர்ந்து வலியுறுத்தியதன் பெயரில், செம்பினால் ஆன புதிய மலர் மொட்டு பொருத்தப்பட்டது. இதனை அடுத்து நேற்று முன்தினம் விநாயகர் பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமத்துடன் கூடிய யாகசாலை பூஜைகள் நடைபெற்று வந்த நிலையில், நேற்று காலை நவக்கிரக சன்னதியில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.