தென்காசி நகரில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பொதுமக்கள் எவ்வித அச்சமும் இன்றி சுதந்திரமாக வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதத்தில் காவல்துறை கண்காணிப்பாளர் திரு.கிருஷ்ணராஜ் அவர்களின் உத்தரவின் பேரில் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று தென்காசியில் உள்ள கூலக்கடை பஜார், மவுண்ட் ரோடு, வேம்படி பள்ளிவாசல் தெரு ஆகிய பகுதிகளில் காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்று காசி விசுவநாத சுவாமி கோவில் முன்பு முடிவடைந்தது. இதில் தென்காசி காவல் ஆய்வாளர் பாலமுருகன் உட்பட காவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.