கன்னியாகுமரி மாவட்டம்., நாகர்கோவிலில் உள்ள பிரசித்தி பெற்ற நாகராஜா கோவில் தேரோட்டம் தைப்பூச தினமான நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இந்த ஆண்டுக்கான தைத் திருவிழா கடந்த 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில், 9-ம் திருநாளான நேற்று 18/01/2022 காலை 8.15 மணிக்கு வடம் பிடிக்கப்பட்டு தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. தேரில் பாமா - ருக்மணி சமேத அனந்தகிருஷ்ணன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இந்த விழாவில் தமிழக அமைச்சர் திரு.மனோதங்கராஜ் உட்பட பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.