- திருநெல்வேலி கால்நடை மருத்துவ கல்லூரியில் ஆராய்ச்சி நிலையத்தில் முத்தமிழ் விழா
- கல்லூரி முதல்வர் பழனிசாமி பழனிசாமி தலைமை வகித்து உரையாற்றினார்.
'தமிழ் மொழியினும் இனிதான மொழி வேறு எங்கும் உள்ளதோ; என்பது நாம் அறிந்த விஷயம். தமிழ் மொழியை உலகத்திற்கு எடுத்துக்காட்ட அடிக்கடி முத்தமிழ் மன்றங்கள் நடப்பதும் உண்டு. பத்திரிக்கைகள் மூலமாக நற்செய்திகள் பல இடத்தில் பரவி மக்கள் செவி பட இனிது பெறுவதும் உண்டு. அப்படிப்பட்ட செய்தியாக இன்று நாம் அறியக் கூடிய செய்தி..
திருநெல்வேலி தமிழ் மன்றம் கலை மற்றும் சார்பில் முத்தமிழ் விழா கால்நடை மருத்துவ கல்லூரியில் ஆராய்ச்சி நிலையத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
முத்தமிழ் விழாவில் கல்லூரி முதல்வர் பழனிசாமி தலைமை வகித்து உரையாற்றினார்.
ஜானகி அம்மாள் , சிவகாமி அய்ய நாடார், கல்லூரி முன்னாள் ஆங்கிலத் துறை தலைவர் சிவகாமி , மு ராமச்சந்திரன்ஆகியோர் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு 'பொருனை தமிழ் மன்ற மாணவர்' இதழை வெளியிட்டு பரிசுகள் வழங்கினார்கள்.
எழுத்தாளர் இயக்குனர் பாரதி கிருஷ்ணகுமார் சிறப்புரை ஆற்ற, தமிழ் மன்ற செயலாளர் மா சுந்தர விநாயகி அறிக்கைதனை சமர்ப்பித்தார்.
சிறந்த சொற்பொழிவிற்கு சேரன் நினைவு தமிழ் அன்றும், என்றும் என்ற தலைப்பில் தேர்வு செய்யப்பட்டு அதற்கான விருதினை இரண்டாம் ஆண்டு மாணவி பாரதிதேவி பெற்றார்.
தமிழ் யாதுமானவள் என்ற கவிதைக்கான பரிசு , மூன்றாம் ஆண்டு மாணவர் அர்ஜுனுக்கு அளிக்கப்பட்டது
கலை மன்ற செயலாளர் த. அண்ணா வரவேற்புரை ஆற்ற தமிழ் மன்ற மாணவர் செயலர் ச. தட்சிணாமூர்த்தி நன்றி கூறினார் . இதற்கான ஏற்பாடுகளை தமிழ் மன்ற உறுப்பினர்கள் செய்திருந்தனர்.
தமிழ் மொழியின் சிறப்பினை மேலும் வெளிக்கொணர்ந்து கலாச்சாரம் பண்பாடு அனைத்தும் மாறாத சமுதாயமாக உருவாக்குவோம் என்று திருநெல்வேலி டுடே செய்திதனை முன்மொழிகின்றது.