- அம்பை தொகுதி பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் இசக்கி சுப்பையா எம் எல் ஏ திறந்து வைத்தார்.
- இசக்கி சுப்பையா எம்எல்ஏ தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 40 லட்சம் வழங்கினார்.
திருநெல்வேலி சேரன்மாதேவி அம்பை தொகுதியில் 2021- 2022 ஆண்டு 17 பள்ளிக்கூடங்களுக்கு ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைவதற்கு திட்டம் வகுக்கப்பட்டு இசக்கி சுப்பையா எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 40 லட்சம் வழங்கப்பட்டது.
சேரன்மாதேவி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி , கோபால சமுத்திரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி , கூனியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, வீரவநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆகியவற்றில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டது. அதற்கான திறப்பு விழா நடந்தது.
இசக்கி சுப்பையா எம்எல்ஏ அனைத்து பள்ளிக்கூடங்களுக்கும் சென்று ஸ்மார்ட் வகுப்பறைகளை திறந்து வைத்தார்.
மணிமுத்தாறு முன்னாள் பேரூராட்சி தலைவர் சிவன் பாபு, சேரன்மாதேவி வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கர குமார் சேரன்மாதேவி ஒன்றிய செயலாளர் மாதிரி செல்வம் அம்பை , ஒன்றிய துணை செயலாளர் பிராங்கிளின், பொதுக்குழு உறுப்பினர் செவல் முத்துசாமி, முன்னாள் மாவட்ட ஆதிதிராவிடர் நல்ல குழு உறுப்பினர் வெள்ளதுரை, நகர செயலாளர்கள், கண்ணன், அதிமுக மாவட்ட இலக்கிய அணி செயலாளர் கூனியூர் மாடசாமி, புதுக்குடி பஞ்சாயத்து தலைவர் சுப்பிரமணியன், சேரன்மாதேவி முன்னாள் பேரூராட்சி தலைவர் பாபநாசம் உற்பட பலர் விழாவில் பங்கேற்றனர்.
Image source: dailythanthi.com