இந்த வார விரத தினங்கள் - 7-7-2022 வியாழன் முதல் 14-7-2022 வியாழன் வரை
10 /7 / 2022 ஞாயிற்றுக்கிழமை ஏகாதசி
12 / 7 / 2022 செவ்வாய்க்கிழமை பிரதோஷம்
13/ 7/2022 புதன்கிழமை பௌர்ணமி
விரத நாட்களில் மனதால் இறைவனை நினைத்து வழிபட்டு வாழ்க்கையில் அனைத்து வளங்களும் பெறுங்கள்.
இந்த வார விரத தினத்தில் பிரதோஷ நாளில் நாம் மறவாது நினைக்கக்கூடிய முக்கியமான அடியார்களின் வாழ்க்கை வரலாற்றை பற்றி தெரிந்து கொள்வோம்.
திருவாரூர் விழாக்கோலம் பூண்டிருக்க,
ஆசை கனவுகள் ஆயிரம் சுமந்து இளமைக்கால சுகபோகங்கள் எண்ணிலா இருக்க...திருமண வாசலில் மணமகன் கோலத்தில் அழகன் அவன் வீற்றிருக்கின்றான். எங்கிருந்தோ வந்த முதியவர் ஸாசனத்தை நீட்ட , திருமண மண்டபம் நீதிமன்றமாய் மாறிய கதை கேளுங்கள்!
" ஆரூரன் ஆகிய நானும், என் சந்ததியும் வழி வழி ஈசனடி தொண்டு செய்ய உடன்பட்டு எழுதிக்கொடுத்த அடிமை சாஸனம்" என படித்து ,அதிர்ந்து தமக்காக வாதாடி தோற்றான் ஆரூரன். ஏனென்றால் வந்தவர் ஈசன் அன்றோ!
திருவெண்ணைநல்லூரில் பிறவிக் கடன் தீர்க்க திருவிளையாடல் புரிந்த ஈசனின் திருவாய்மொழி தனை ஏற்றுக்கொண்டு...
'பித்தா பிறை சூடி பெருமானே அருளாளா -எத்தான் மறவாதே நினைக்கின்றேன் மனத்து உன்னை வைத்தாய் பெண்ணை தென்பால் வெண்ணை நல்லூர் அருள் துறையுள் அத்தா வுனக்கு ஆளாய் இனி அல்லேன் எனலாமே'
என கண்களில் கண்ணீர் மல்க பாடி நம்மை பரவசப்படுத்திய 63 அடியார்களில் ஒருவர்தான் சுந்தரமூர்த்தி நாயனார்.
திருவெண்ணைநல்லூர் ஈசனின் திருவிளையாடல் புரிந்தான் அன்று.
இதுதான் கடவுளுக்கும் நமக்கும் உள்ள ஒப்பந்தம்..
முற்பிறவியின் கடன் தீர்க்க இப்பிறவி தனை இறைவன் நம்மை ஆட்கொள்கின்றான்.
நாம் என்னதான் முயன்றும் முயற்சி செய்தும் சம்சார பந்தத்தில் இனிமையை அனுபவிக்க ஆசைப்பட்டாலும் , அடிக்கடி நீ எமை நினைத்து கொண்டே இரு இறைவன் நமக்கு பல சோதனைகள் கொடுக்கின்றார்.
முற்பிறவியில் கடன் தீர்க்க இப்பிறவிதனில் அடிக்கடி அவன்பால் நம்மை இழுக்கின்றான்.
பசிக்கு உணவளித்து, நோய்க்கு மருந்தளித்து ,கல்விக்கு உயிர் கொடுத்து, ஏழைக்கு வாழ்வளித்து , தானதர்மங்கள் பல அளித்து, இறைவனுக்கு தொண்டு செய்து இறைவனின் ஒப்பந்தத்தை நிறைவுசெய்து , மனதில் மகிழ்ச்சி காண்போம்.
'இப்பிறவியில் நாம் செய்யும் செயல்களின் புண்ணிய பலன்களே, எப்பிறவியிலும் நம்மை காத்து அருளும்' எனும் கடவுளின் ஒப்பந்தத்தை என்றும் பின்பற்றி வாழ்வில் இனிது காண்போம்.
Image source: allindiaroundup.com