உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு தேர்தல் சம்மந்தமான புகார்களை பொதுமக்கள் தெரிவிக்க ஏதுவாக திருநெல்வேலி மாநகராட்சி அலுவலக வளாகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் திரு.விஷ்ணு சந்திரன் அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பொதுமக்கள் தேர்தல் சம்மந்தமான புகார்களை 18004254656 என்ற இலவச தொலைபேசி எண்ணிலும், 0462-2329328, 9489930261 என்ற தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் எனவும், அந்த புகார்களை தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் நியமிக்கப்பட்டுள்ள பணியாளர்கள் உடனுக்குடன் பதிவு செய்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.