திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு 274 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பதற்றமான வாக்குச்சாவடிகளில் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்படும் எனவும், அந்த அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் எனவும், உள்ளாட்சி தேர்தலை ஒட்டி திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 23 சோதனைச்சாவடிகளில் 1,600 காவலர்களும், மாநகர பகுதியில் உள்ள 7 சோதனைச்சாவடிகளில் 1,168 காவலர்களும், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளதாகவும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.விஷ்ணு அவர்கள் தெரிவித்துள்ளார்.