செய்திக்குறிப்புகள்:
- நெல்லை மாவட்டம் செஸ் ஒலிம்பியாட் தொடர் ஜோதி ஓட்டத்தை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்.
- செஸ் போட்டியில் சிறப்பாக விளையாடிய 10 பேருக்கும், பங்கேற்றவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.
திருநெல்வேலி பாளையங்கோட்டையில் செஸ் ஒலிம்பியாட் தொடர் ஜோதி ஓட்டம் நடைபெற்றது . சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
44 ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியானது சென்னை அருகே மாமல்லபுரத்தில் நடக்க இருக்கிறது .ஜூலை 28ஆம் தேதி வியாழக்கிழமை தொடங்கி ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும்.
தமிழகம் முழுவதும் இதற்கான விழிப்புணர்வு பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் , நெல்லை மாவட்டம் ஒலிம்பியாட் தொடர் ஜோதி ஓட்டத்தை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்.
நேற்று முன்தினம் முதல் ஜோதி ஓட்டம் நடைபெற்று வருகின்றது. இந்த ஜோதியானது நேற்று இரவு மதுரையில் இருந்து நெல்லைக்கு வந்து சேர்ந்தது. சேரன்மாதேவி உதவி கலெக்டர் இந்த ஜோதியை பெற்று கொண்டார்.
பாளையங்கோட்டை வ.உ. சி மைதானத்தில் உள் விளையாட்டு அரங்கில் செஸ் ஒலிம்பியாட் ஜோதி வைக்கப்பட்டது.
தொடர்ந்து செஸ் போட்டிகள் அங்கு நேற்று காலை ஏழு மணிக்கு ஆரம்பித்தது. முன்தினம் இரவு முழுவதும் நடைபெற்ற இந்த போட்டியில் ஏராளமான மாணவர்கள் , முதியவர்கள் பங்கேற்றனர்.
போட்டியில் பங்கேற்றவர்களுக்கும், சிறப்பாக விளையாடிய 10 பேருக்கும் சபாநாயகர் அப்பாவு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
இடைத்தொடர்ந்து ஒலிம்பியாட் விழிப்புணர்வு வாசகங்கள், போதை ஒழிப்பு விழிப்புணர்வு வாசகங்கள் எழுதிய பலூன்களை சபாநாயகர் அப்பாவு பறக்க விட, மக்கள் ஆரவாரத்தோடு கையசைத்தனர்.
மேலும் பயண கொடி அசைத்து சபாநாயகர் தொடங்கி வைக்க , அந்த ஜோதி பயணம் அண்ணா விளையாட்டு மைதானம் , காந்திமதி பள்ளிக்கூடம் , நாங்குநேரி வள்ளியூர் வழியாக கன்னியாகுமரி மாவட்டம் அடைந்தது.
பாளையங்கோட்டையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, மேயர் பி. எம். சரவணன், துணை மேயர் கே.ஆர் . ராஜு , மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ , முன்னாள் எம்.பி. விஜிலா சத்யானந்த், செஸ் கழக நிர்வாகிகள் பாலகுமார், மணிகண்டன் , மாநகர போலீஸ் துணை கமிஷனர் ஸ்ரீநிவாசன், மாவட்ட விளையாட்டு அலுவலர் கிருஷ்ண சக்கரவர்த்தி மற்றும் பலர் பங்கேற்றனர்.
Image source: dailythanthi.com