- வள்ளியூரில் சட்டப்பேரவை தலைவர் மு. அப்பாவு தலைமையில் மின்சார பெருவிழா நடைபெற்றது.
- தேர்பவனி நடைபெறும் ரத வீதிகளில் மின் விபத்தை தடுக்க புதைவடங்கள் அமைக்க வேண்டும் பேரவை தலைவர் அறிவுறுத்தல்.
நெல்லை மாவட்டம் வள்ளியூரில் ஜூலை 26 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை ஒளிமிகு பாரதம் ஒளிமயமான எதிர்காலம் மின் சக்தி 2047 என்ற மின்சார பெருவிழா நடைபெற்றது.
இந்த விழாவினில் சட்டப்பேரவை தலைவர் மு. அப்பாவு தலைமை தாங்கி பங்கேற்று பேசினார். அப்பொழுது அவர் கூறியதாவது ;
தமிழ்நாட்டை பொறுத்தவரை மின் இணைப்பு கேட்டு விண்ணப்பம் செய்பவர்களுக்கு 24 மணி நேரத்தில் மின் இணைப்பு வழங்கப்படுகின்றது. மத்திய மாநில அரசுகள் இரண்டும் ஒன்றாக சேர்ந்து மின்சார உற்பத்தியில் தன்னிறைவு கண்டுள்ளது..
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட வேண்டும் . அப்படி வழங்கவிட்டால் அவர்களை தேடி கண்டுபிடிக்கும் நிலை ஏற்படும். அதை கருத்தில் கொண்டுதான் முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களும் அவரது வழியில் வந்த முதலமைச்சர் மு க .ஸ்டாலின் அவர்களும் செயல்படுகின்றனர். .விவசாயிகள் அலைக்கழிக்கப்படாமல் அவர்களது கோரிக்கைகளை அதிகாரிகள் நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும் என்று கூறினார். மேலும் சபாநாயகர் பேசுகையில்….
திருவிழா காலங்களில் தேர் பவனி தேரோட்டம் நடைபெறும் . ரத வீதிகளிலும் கடற்கரை பகுதிகளிலும், உப்பு காற்றால் மின்கம்பிகள் பாதிக்கப்படாத வண்ணம் புதைவடம் மின்பாதை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். புதைவடத்திற்கான மதிப்பு எவ்வளவு என்று தயார் செய்து தாருங்கள். முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வோம் . அதற்கான வசதிகளை நான் பெற்றுத் தருகிறேன் என்று கூறினார் .
மின்வாரிய தலைமை பொறியாளர் செல்வகுமார், உதவி செயற்பொறியாளர் வளன்அரசு, இளநிலை பொறியாளர்கள் ஜெகதீஷ், தி.மு.க ராதாகிருஷ்ணன் , அன்பரசு, காவல்கிணறு அழகேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.