செய்திக்குறிப்புகள்:
- திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் காந்தி அம்மன் திருக்கோவில் ஆனித் தேரோட்டம்
- ஜூலை 11ஆம் தேதி உள்ளூர் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியர் வே விஷ்ணு அறிவிப்பு
திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் காந்தி அம்மன் திருக்கோவில் ஆனித் தேரோட்டம்
ஜூலை 11ஆம் தேதி நடைபெற இருப்பதால் திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை என மாவட்ட கலெக்டர் வே விஷ்ணு அறிவித்துள்ளார்.
அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும், நிறுவனங்களுக்கும், சேர்த்து உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகின்றது .
அரசு பொதுத்தேர்வுகள் ஏதும் இருந்தால் பொதுத்தேர்வு எழுதும் பள்ளி மாணவர்களுக்கு பொது தேர்வுகள் அனைத்தும் எவ்வித தடங்களும் இன்றி நடைபெறும்.
விடுமுறை அளிக்கப்பட்டாலும் பொதுத் தேர்வு நடைபெறும் என்றும் , பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், அலுவலகங்களுக்கு பொதுத்தேர்வு தொடர்பாக பணிகள் இருந்தால் இந்த உள்ளூர் விடுமுறை அவர்களுக்கு பொருந்தாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
செலவாணி முரிச்சட்டம் 1881 இன் கீழ் இந்த விடுமுறை சட்டம் அறிவிக்கப்படவில்லை என்பதால் வங்கிகளுக்கு விடுமுறை பொருந்தாது.
குறைந்தபட்ச பணியாளர்களை கொண்டு மாவட்ட கருவூலம் மற்றும் அனைத்து சார்க் கருவூலங்களும் அரசு கோப்புகள் தொடர்பாக அவசரப் பணிகளை கவனிப்பதற்காக செயல்படும் .ஜூலை 23ஆம் தேதி உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது என்று மாவட்ட கலெக்டர் தன்னுடைய செய்தி குறிப்பில் அறிவித்துள்ளார்.
Image source: tamil.oneindia.com/