செய்திக்குறிப்புகள்:
- நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் சாரல் மழை பெய்தது
- சாரல் மழை காரணமாக பாபநாசம் அணை நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
விவசாயிகளுக்கு மிகவும் மகிழ்ச்சியூட்டும் விதமாக நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் சாரல் மழை பெய்தது.
பாபநாசம் அணை மற்றும் தென்மாவட்டங்களின் முக்கிய மற்றும் பிரதான அணைகளின் நீர் பிடிப்பு பகுதிகளில் , இத்தனை நாட்களாக போதிய மழை இல்லாததாலும் அனைத்து வரக்கூடிய நீர் வரவு குறைவாக இருப்பதாலும் அணையின் நீர்மட்டம் குறைந்து இருந்தது.
இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக மேற்கு தொடர்ச்சி மலையின் மலைப்பகுதியில் பரவலாக சாரல் மழை பெய்து வருகிறது. அதனால் அனைத்து அணைகளிலும் நீர் வரத்து அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டமும் உயரத் தொடங்கியுள்ளது.
நேற்று முன்தினம் மழையின் காரணமாக 1.090.65 கன அடி நீர் அணையில் புரண்டோடியது. நேற்று காலை நீர்வரத்து1.909.95 ஆகவும் அதிகரித்துள்ளது
அணைநீர் மட்டம் நேற்று முன்தினம் 55.90 அடியாகவும், நேற்று 58 அடியாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்த மழை சாரல் காரணமாக அணை நீர்மட்டம் உயர்ந்து வருவதால் அதைப் பார்த்த பொதுமக்களும் விவசாயிகளும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.
Image source: dailythanthi.com