ஆடல் அரசனாகிய சிவபெருமான் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுக்கும் திருத்தலம் -திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயம்.
மேற்கு நோக்கி அமைந்திருக்கும் இந்த ஆலயம் திருக்கடவூர் எனவும் வில்வராண்ய ஷேத்திரம் எனவும் புகழ் படுகின்ற போற்றப்படுகின்ற ஒரு தலம்.
வில்வராணிய ஷேத்திரம் எனும் திருக்கடையூரில் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் அமைந்திருக்கும் வில்வ மரத்தின் அடியில்- லிங்க வடிவில் காட்சி தரும் சிவபெருமானை வழிபடுங்கள்.படிப்பில் கவனமின்றி இருக்கும் குழந்தைகளும், ஞான அறிவு பெற்று படிப்பிலே சிறப்பு பெற்று வாழ்க்கையில் முன்னேற்றம் காண்பார்கள்.
அதற்கான சிறப்பான தலவரலாற்றை காண்போம் ..
சத்திய லோகத்தில் வாழ்பவன். மும்மூர்த்திகளில் ஒருவனாக திகழ்பவன் .மகாவிஷ்ணுவின் நாபிக்கமலத்தில் உதித்தவன் படைக்கும் கடவுளாகிய பிரம்மதேவனுக்கு ஞான உபதேசம் பெற ஆவல் பிறக்கின்றது.
ஞானஉபதேசம் வேண்டி திருக்கடையூருக்கு சென்று இறைவனை வேண்டி தவம் செய்கின்றான். சிவபெருமானும் பிரம்மனின் தவத்தை ஏற்று தம்முடைய சிவஞானத்தை ஒரு வில்வ விதையாக்கி பிரம்மனிடம்.கொடுக்க , பிரம்மனும் திருக்கடையூரில் தாம் தவம் செய்த இடத்தில் அந்த விதையை விதைக்க்கின்றார்
அந்த விதையானது வளர்ந்து பெரிய வில்வ மரம் ஆகின்றது. அந்த வில்வமரத்தின் அடியில் சிவபெருமான் ஒரு லிங்க வடிவில் தோன்றி பிரம்மனுக்கு ஞான உபதேசம் வழங்குகின்ற அற்புதமான காட்சிதனை திருக்கடையூரில் நாம் தரிசனம் காணலாம்.
வில்வ மரத்தின் அடியில் லிங்க வடிவில் காட்சி தந்து ஞான உபதேசம் வழங்கியதால் வில்வராணி ஷேத்திரம் எனும் புண்ணிய ஷேத்திரம் ஆக திருக்கடையூர் ஆலயம் விளங்குகின்றது.
நம்முடைய குழந்தைகள் எதிர்காலத்தில் எப்படி எல்லாம் வரவேண்டும் என்று நாம் எதிர்பார்க்கும் சிறப்புகள் அனைத்தும் பெற்று, ஞான ஆசியை பெறுவதற்கான அற்புதமான தலமே இந்த அமிர்தகடேஸ்வரர் ஆலயம்.
ஆன்மீக சுற்றுலா பயணமாக திருக்கடையூர் சிவபெருமானை சென்று வழிபட்டு வாழ்க்கையில் அனைத்து வளம் காணுங்கள்.