Logo of Tirunelveli Today

சிறப்பான வாழ்க்கைக்கு உப்புக்கல் பரிகாரம்

July 8, 2022
வாசிப்பு நேரம்: 7 நிமிடங்கள்
No Comments

சூரிய தேவனின் அனுக்கிரகம் பெற்று கடல் நீரில் இருந்து பிரிந்து- வடிவம் பெற்று திகழ்கின்ற உப்பில்  பஞ்சபூத சக்திகளும் அடக்கம் .

கல்உப்பு மகாலட்சுமியின் ஸ்வரூபம் மகா லட்சுமியின் அருளைப் பெற்று வாழ்வினில் சுபிட்சம் பெற -கல்லுப்பு அகல் தீபம் ஏற்றுவது என்பது சுபீட்சம் தரும்.

பெரும் பாறாங்கற்களை போன்ற பல துன்பங்கள் நிறைந்து இருந்தாலும் நம் வாழ்க்கையில் அனைத்தையும் தவிடு பொடியாக்கி பனிபோல் கரைக்கின்ற சக்தி உப்பு கல்லுக்கு உண்டு .

கடல் நீரிலே தோன்றிய உப்பு அனைத்து கண் திருஷ்டிகளும் ,தோஷம் பிணி பயம் , பாவம் அனைத்திலிருந்தும் விடுபட்டு எதிர்மறை சக்திகள் அனைத்தும் விலகி தெய்வத்தின் அனுக்கிரகம் பெறுவதற்கு உப்புக்கல் பரிகாரம் என்பது மிக சிறந்த ஒரு பரிகாரம்.

உடல்நிலை அற்றோர், தோஷம், கண் திருஷ்டி , கெட்ட கனவு வருதல், மனக்குழப்பம் வீட்டில் எப்பொழுதும் சச்சரவு சண்டை என இருந்தால் தொடர்ந்து மூன்று நாட்கள் இவ்வாறு திருஷ்டி சுற்றி வந்தால் நிச்சயம் வாழ்க்கையின் நல்ல நிலை மாற்றத்தை நாமே புரிந்து கொள்வோம்.

வழிமுறையை காண்போம்..

ஒரு குவளையில் முக்கால் பாகம் தண்ணீர் ஊற்றி வாசற்கால் தாண்டி கோலம் போடுகின்ற தெரு வாசலுக்கு உட்புறமாக ஒரு மூலையில் வைத்துவிடவும்.

மாலை ஆறு மணிக்கு மேல் கண்திருஷ்டி கொண்டவரை கிழக்கு முகமாக பார்த்தவாறு உட்கார வைக்க வேண்டும். நம்முடைய இரு கைகளாலும் கல் உப்பை அள்ளிக் கொண்டு, வலது புறமாக மூன்று முறையும் இடது புறமாக மூன்று முறையும் அனைத்து திருஷ்டிகளும் போக வேண்டுமென்று மனதிலே நன்றாக நினைத்து நன்றாக தலையை சுற்றி கொண்டு சென்று வெளியிலே வைத்திருக்கும் அந்த குவளையில் உப்புக்கல்லை கொட்டவும்..

பிறகு மறுநாள் தெருவிலே எடுத்துச்சென்று கால் படாத இடத்தில் ஓரமாக ஊற்றி விடலாம் . கண் திருஷ்டிகள் அனைத்தும் விலக இந்த பரிகாரம் நல்ல பலனைத் தரும் .

வீட்டில் உள்ள எதிர்மறை சக்திகள் விலகி வீட்டில் எப்பொழுதும் நேர்மறை சக்திகள் நிறைந்து இருக்க உப்பு ஒன்று நமக்கு நல்ல பரிகாரமாய் அமையும். இப்படிப்பட்ட வழிமுறைகளை தெரிந்து கொண்டு வாழ்வினில் வளம் காணுங்கள்.

Image source: dheivegam.com

செய்தி ஆசிரியர்

பாலாக்ஷிதா

லதா குமார், "பாலாக்க்ஷிதா" என்ற புனைபெயரில் தமிழ் எழுத்தாளராக 5 வருடமாக எழுதி வருகிறார்.

வாழ்க்கையின் மலர்ச்சிக்கும் வளர்ச்சிக்கும் தேவையான கருத்துக்கள் பற்றி விவாதிப்பது, பேசுவது, எழுதுவது என்பவை இவருக்கு மிகவும் பிடித்தவை.
தன்னுடைய நற்கருத்துக்கள் மக்களிடத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் தெளிவு கொண்டு எழுதி, அதில் மனநிறைவும் காண்கிறார்.

தமிழின் மீது உள்ள ஆர்வம் காரணமாக, தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட வெளிநாடு வாழ் இந்திய குழந்தைகளுக்கு மெய்நிகர் வழி இணைய முகப்பில் ஆன்லைன் தமிழ் பாடங்களை கற்று தருகிறார். இதுவரை நான்கு மின் புத்தகங்கள் அமேசான் கிண்டிலில் எழுதி வெளியிட்டுள்ளார்.

"இனிது இனிது வாழ்க்கை இனிதன்றோ!" எனும் புத்தகத்தை கருத்தாக்கம் செய்து, எழுதி, அச்சிட்டு வெளியிட்டு இருக்கிறார். தமிழ் கோரா இணையதளத்தில் “பாலாக்க்ஷிதா” எனும் பெயரில் நிறைய தமிழ் பதிவுகளும், பலரின் வினாக்களுக்கும், ஐயங்களுக்கும் விடை அளித்தும் வருகிறார்.

இவருடைய பதிவுகளை பரிசீலித்து, தமிழ் கோராவின் உயர் நிர்வாகிகள் சமீபத்தில் இவரை 'தமிழ் கோராவின் சிறந்த எழுத்தாளர்' எனும் அங்கீகாரத்தை கொடுத்து கௌரவித்து உள்ளார்கள். தமிழ் கோராவின் ஒலியோடை பகுதியில் பல ஒலிப்பதிவுகளையும் பேசி, பதிவு செய்து வெளியிட உதவியுள்ளார்.

அனைவருக்கும் பயனுள்ள வகையில் தமிழெனும் அழகிய மொழிதனில் தமிழ் சார்ந்த பதிவுகள் நிறைய எழுத வேண்டும் என்பது இவரது மேலான விருப்பம்.

Leave a Reply

Your email address will not be published.

எம்மில் தேடுக

இதையும் படிக்கலாமே..

இதையும் படிக்கலாமே..

உதவிக்கு அழைக்க
  • ஆட்சியர் அலுவலகம் : 0462-2501035
  • காவல் கட்டுப்பாட்டு அறை : 100
  • போக்குவரத்து காவல்துறை : 103
  • மருத்துவ உதவி எண் : 104
  • தீயணைப்பு துறை : 101
  • ஆம்புலன்ஸ் உதவிக்கு : 108
  • ஆம்புலன்ஸ் (தேசிய நெடுஞ்சாலைகள்) : 1073
  • குழந்தைகள் நலம் : 1098
  • பாலியல் துன்புறுத்தல் : 1091
  • ரயில்வே உதவி எண் : 1512
TIRUNELVELI WEATHER
Copyright © 2022 Tirunelveli Today | All Rights Reserved.
Top file-emptyusertagcalendar-fullclockmagnifiercrosstext-align-justify