செய்திக் குறிப்புகள் :
- அதிமுகவால் பணி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு மீண்டும் பணியில் அமர்வதற்கான திட்டம் உறுதி கலெக்டர் அறிவிப்பு
- மக்கள் நல பணியாளர்கள் புதிய வேலைக்கு 18 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் .
பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் ஆகட்டும் , புதிய பணி செய்பவர்கள் இருவருக்கும் ஊட்டம் தரும் வகையில் அமைந்துள்ள இந்த வாய்ப்பினை பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற்றம் காண வேண்டும் என்று திருநெல்வேலி டுடே தன் கருத்தூட்டமாக இந்த பதிவினை வெளியிடுகின்றது.
முதன் முதலில் திமுக ஆட்சியில் மக்கள் நலப் பணியாளர்கள் நியமிக்கப்பட்ட நிலையில் அதிமுக அரசால் கடந்த 2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8ஆம் தேதி இப்பணியிடங்கள் ரத்து செய்யப்பட்டன.எப்பொழுதெல்லாம் அதிமுக ஆட்சிக்கு வருகிறதோ, அப்பொழுதெல்லாம் ரத்து செய்திருக்கிறது.
திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் மீண்டும் அவர்கள் பணி அமர்த்தப்படுகிறார்கள். இதுதான் மாறி, மாறி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இப்பொழுது திமுக ஆட்சியில் மு .க ஸ்டாலின் அவர்களுடைய ஒப்புதலின்படி
பணி நீக்கம் செய்யப்பட்ட பணியாளர்கள் தற்போது அரசு மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணி ஒருங்கிணைப்பாளராக வேலையில் சேரலாம்.
மக்கள் நலப்பணியாளர்கள் இன் புதிய வேலைக்கான விண்ணப்ப மனு 18ம் தேதிக்குள் கொடுத்துவிட வேண்டும் இந்தத் தகவலை மாவட்ட கலெக்டர் விஷ்ணு வெளியிட்டுள்ளார்.
தேசிய ஊரக வேலை உறுதி திட்ட நிதியில் இருந்து 5,000 ரூபாய் கூடுதலாக கிராம ஊராட்சி பணிகளுக்காக 2500 ரூபாய் ஆக மொத்தம் 7, 500 ரூபாய் மாதம் ஒன்றுக்கு ஒட்டு மொத்த தொகுப்பு ஊதியம் வழங்கப்படும். விவரங்களுக்கு யூனியனில் வட்டார வளர்ச்சி அலுவலரை தொடர்பு கொள்ளவும்.
ஜூலை மாதம் 1-ஆம் தேதி முதல் பணிபுரிவதற்கான வாய்ப்பு வழங்கப்படும் . காலம் கடந்து வரும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட மாட்டாது. வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கலெக்டர் அறிவித்தார்