12 6 2022 ஞாயிற்றுக்கிழமை வடிவேல் எனக்கு பிறந்தநாள் மாதத்தில் விசாக நட்சத்திரத்தில் எம்பெருமான் முருகன் அவதரித்த திருநாள் அந்நாளிலே விரதம் இருக்கும் முறை பற்றி பார்ப்போம்.
1- நம்முடைய காரியம் ஜெயம் ஆக முருகனை வேண்டிகொண்டு விடிகாலை எழுந்து-ஸ்நானம் முடிந்தவுடன் ஆலயம் சென்று அர்ச்சனை வழிபாடுகளோடு ஆரம்பித்தல் சிறப்பு.
2 - விநாயக பெருமானை வேண்டி அதன் பிறகே நாம் விரதம் இருப்பதற்கான எம்பெருமான் முருகனை வேண்டுதல் மிக சிறப்பு. .
3- நெற்றியிலே விபூதி குங்குமம் அல்லது சந்தனம் என குளிர்ந்து நிறைந்து இருத்தல் விரதத்திற்கு உரிய தனிச்சிறப்பு .
4 - காலை மாலை விளக்கேற்றி முருகனின் புகழ் பாடி -கந்தபுராணம் கந்த சஷ்டி மனமுருகி மெய் கனிந்து படித்தல் விரதத்திற்கு சிறப்பு.
5 - முருகனையே நினைத்து காலை உணவை தவிர்த்து மதியம் ஒருவேளை உணவு உண்டு இரவில் பால் பழம் என அல்லது டிபன் எடுத்துக்கொள்வது முறையான விரதம் இருப்பதற்கான சிறப்பு .
6 - விரதம் இருக்கும் பொழுது கோபப்படுதல், தவறாக பேசுதல் கூடாது முடிந்தவரை மௌன விரதம் இருந்து அவசியத்திற்கு மட்டுமே பேசுவது என்பது விரதத்திற்கே சிறப்பு.
இப்படி முறையாக விரதத்தை முறையாக எடுத்துக்கொண்டு ,நாம் ஒரு வேண்டுதலை இறைவனிடம் வைத்தால் அளவில்லாத ஆனந்தம் கொண்டு கந்தன் கடம்பன் கதிர்வேலன் முருகன் என அன்போடு அழைக்கப்படும் மயில் மீது அமர்ந்திருக்கும் எம்பெருமான் குமரனவன் பலனை இனிதே நிறைவேற்றி வாழ்க்கையில் ஒளியேற்றி கவலையெல்லாம் நீக்கி அருள்புரிவான்.
வைகாசி விசாகத்தன்று முருகனையே நினைத்து மனதை ஒரு நிலைப்படுத்தி, உபவாசம் இருந்து, சிந்தை தெளிவாகி ஒழுக்க அறநெறிகள் தான் கொண்டு வாழ்வோம். இம்மை மறுமையிலும் இறை அருள் பெற்று இனிதாக வாழ்ந்து நம்முடைய வாழ்வின் பிறவிப்பயனை இனிதே பூர்த்தி செய்து நிறைவு காண்போம்.