- சனிக்கிழமை நடைபெற்ற களக்காடு அருகே கடம்போடுவாழ்வு செயின்ட் ஜோசப் கல்வியல் கல்லூரியில் சிறு குறு தொழில்கள் வளர்ச்சி குறித்த கருத்தரங்கம்.
- கருத்தரங்கை பேரவை தலைவர் மு . அப்பாவு தொடங்கி வைத்தார். எம் எல் ஏ .ரூபி . ஆர் மனோகரன் வரவேற்றார்.
நடப்பு செய்திதனை தெரிந்து கொள்வதற்கு முன்பு அதில் இருக்கும் விஷயங்களுக்கும் விளக்கம் கொடுப்பதில் திருநெல்வேலி டுடே என்றும் முன்னிலை வகிக்கின்றது.
கருத்தரங்கம் என்றால் என்ன!
ஒரு குழுவாக அழகாய் இணைந்து செயல்படுவது கருத்தரங்கம். அனைவருடைய கருத்துக்களையும் அனுகூலமாய் ஏற்று , மற்றவர்களுடைய கருத்துக்களுக்கு மதிப்பளித்து, தன்னுடைய கருத்துக்களை பகிர்ந்தளித்து பேசும்போது ஏற்படக்கூடிய பலன்களை கருத்தரங்கில் நாம் பெறலாம்.
வாழ்வில் முன்னேற்றத்திற்கான பல வழிகளை கருத்தரங்கின் மூலம் பெற முடியும் என்பதை மையமாக வைத்து செயல்படுவதால் கருத்தரங்கம் என்பது ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் முக்கியத்துவம் பெறுகின்றது.
இதை மையமாக வைத்து சனிக்கிழமை அன்று களக்காடு அருகே கடம்போடுவாழ்வு செயின்ட் ஜோசப் கல்வியல் கல்லூரியில் சிறு குறு தொழில்கள் வளர்ச்சி குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.
கருத்தரங்கை பேரவை தலைவர் மு . அப்பாவு தொடங்கி வைத்தார். எம் எல் ஏ .ரூபி . ஆர் மனோகரன் வரவேற்புரை ஆற்றினார்.
கல்லூரி தாளாளர் தமிழ்செல்வன் முன்னிலை வகித்து கருத்தரங்கில் மகளிருக்கான சிறு குறு தொழில் தொடங்குவதற்கான, வளர்ச்சிக்கான பல ஆலோசனைகள் பற்றி பேசினார். மகளிர் குழுவினருக்கு சிறு தொழில் தொடங்குவதற்கான கடன் உதவிகள் வழங்கப்பட்டன.