தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வந்த நிலையில் மாநிலம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள பொதுமக்களுக்கு அரசு சார்பில் இலவச தடுப்பூசி போடும் முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழக அரசின் இந்த நடவடிக்கையால் திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இதுவரை 89 ஆயிரத்து 350 நபர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர் என மாநகராட்சி ஆணையாளர் திரு.விஷ்ணு சந்திரன் அவர்கள் தெரிவித்துள்ளார். இதில் 45 வயதிற்கு மேற்பட்டவர்களில் 80,350 நபர்களுக்கும், 18 வயதிற்கு மேல் உள்ளவர்களில் 9000 நபர்களுக்கும் என மொத்தம் 89350 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதனால், கொரோனா நோய்த் தொற்றின் பரவல் திருநெல்வேலி மாநகராட்சி பகுதிகளில் படிப்படியாகக் குறைந்து வருகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.