திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கூடங்குளம் அணு மின்நிலையத்தில் ஏற்கனவே 1, 2 இரண்டு அணு உலைகள் அமைக்கப்பட்டு அதில் இருந்து தலா 1000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இரண்டாம் கட்டமாக 3 மற்றும் 4 வது அணு உலையின் கட்டுமானப் பணிகள் நடந்து வருகிறது. தற்போது மூன்றாம் கட்டமாக சுமார் 49 ஆயிரத்து 621கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் 5 மற்றும் 6 வது அணு உலைகள் அமைக்கும் பணி நேற்று காலை பூமி பூஜையுடன் துவங்கியது.
இந்த நிகழ்ச்சியை இந்திய அணுசக்தித்துறை தலைவர் கே.என்.வியாஸ் அவர்கள், ரஷ்ய அணுசக்தி ஏற்றுமதி கழக இயக்குனர் அலெக்சி லிக்காசெவி அவர்கள் ஆகியோர் காணொளி காட்சி மூலம் துவங்கி வைக்க, கூடங்குளம் அணு உலை வளாக இயக்குனர் ராஜிவ் மனோகரன் காட் பிளே அவர்கள், ஐந்து மற்றும் ஆறாம் அணு உலைகளுக்கான திட்ட இயக்குனர் எம்.எஸ்.சுரேஷ் அவர்கள், நிலைய இயக்குனர் சுரேஷ்பாபு அவர்கள் உள்ளிட்ட பலர் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி நேரில் கலந்து கொண்டனர்.