தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க வரும் 21/06/2021 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த திங்கள்கிழமை அன்று ஊரடங்கில் அறிவிக்கப்பட்ட கூடுதல் தளர்வுகள் காரணமாக நெல்லை மாநகரில் உள்ள சாலைகள் முழுவதும் போக்குவரத்து நெருக்கடி மிகுந்து காணப்படுகிறது. குறிப்பாக இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் போக்குவரத்து மாநகரில் பெருகியுள்ளது.
தற்போதைய ஊரடங்கு தளர்வுகளால் டீக்கடைகள், முடி திருத்தும் நிலையங்கள், இனிப்பு லாலா கடைகள் ஆகியவை திறக்கப்பட்டுள்ளதால் கடைகளில் பொருட்கள் வாங்கவும் மக்கள் ஆர்வமாக குவிவதால், காலை மணி முதலே மாநகரில் உள்ள வண்ணாரப்பேட்டை, ஸ்ரீபுரம், திருநெல்வேலி டவுன் ரத வீதிகள், பாளையங்கோட்டை மார்க்கெட் சாலைகள் அனைத்தும் போக்குவரத்து நிரம்பி காணப்படுகிறது.