தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோவில்களில் மாத சம்பளம் இன்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பட்டர்கள், பூசாரிகள் மற்றும் பிற பணியாளர்களுக்கு கொரோனா கால நிவாரணமாக ரூ 4,000 உதவி தொகை, பத்து கிலோ அரிசி, ஆகியவை வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.
இதன் அடிப்படையில் திருநெல்வேலி மாவட்டத்தில் பணியாற்றும் திருக்கோவில் அர்ச்சகர்களுக்கு நேற்று பாளையங்கோட்டை இராமசாமி கோவிலில் வைத்து நிவாரணத்தொகை மற்றும் அரிசி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் கலந்து கொண்டு கோவில் அர்ச்சகர்கள் , பூசாரிகள் என 338 பயனாளிகளுக்கு நிவாரண பொருட்களை வழங்கினர்.