திருநெல்வேலி மாநகராட்சி பகுதிகளில் வாழும் பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் ஏற்படும் குப்பைகள் தேக்கம், பொது சுகாதாரம், குடிநீர் விநியோகம், வடிகால் வசதி, சாலை வசதி, தெரு விளக்கு வசதி ஆகியவற்றில் ஏற்படும் குறைகள் மற்றும் புகார்களை ஏற்கனவே நடைமுறையில் உள்ள 94899 30261 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் தெரிவிக்கலாம் என மாநகராட்சி ஆணையாளர் திரு.விஷ்ணு சந்திரன் அவர்கள் தெரிவித்து உள்ளார்.
மேலும் அவர், இந்த வாட்ஸ்-அப் எண்ணில் தெரிவிக்கப்படும் குறைகள் / புகார்கள் சம்மந்தப்பட்ட மாநகராட்சி அலுவலர்களுக்கு செய்தியாக அனுப்பி வைக்கப்பட்டு, நடவடிக்கைகள் எடுக்கப்படும். இந்த புகார் சம்மந்தப்பட்ட கோரிக்கை ஈர்ப்பு, கோரிக்கை நிறைவேற்றம் உள்ளிட்ட தகவல்கள், மனுதாரரின் கைப்பேசி எண்ணுக்கு அனுப்பி வைக்கப்படும். எனவே பொதுமக்கள் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளும்படி தெரிவித்துள்ளார்.