திருநெல்வேலி மாநகராட்சி பகுதிகளில் “சீர்மிகு நகரம்” திட்டத்தின் கீழ் பாளையங்கோட்டையில் ரூ.13.8 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் நவீன பஸ்நிலைய கட்டுமான பணிகள், ரூ.14.27 கோடியில் புனரமைக்கப்படும் புதிய பேருந்து நிலைய வளாக வளர்ச்சி பணிகள், புதிய பேருந்து நிலைய வளாகத்தில் ரூ.11.75 கோடியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள நவீன அடுக்குமாடி வாகனங்கள் நிறுத்தும் இடம், மேலும் அதே வளாகத்தில் கூடுதலாக கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி இருசக்கர வாகன நிறுத்தும் இடம் பணிகள், ரூ.14 கோடியே 68 லட்சத்தில் திருநெல்வேலி டவுன் நயினார்குளம் கரையோரத்தில் நடைபெறும் நவீன நடைமேடை அமைக்கும் பணி மற்றும் மேம்பாட்டு பணிகள் ஆகியவற்றையும் திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் திரு.விஷ்ணுசந்திரன் முன்னிலையில், திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.விஷ்ணு நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.விஷ்ணு அவர்கள் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களிடம், திருநெல்வேலி மாநகராட்சி பகுதிகளில் "சீர்மிகு நகரம்" திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் திட்ட பணிகள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் யாவும் கொரோனா கால ஊரடங்கினால் தாமதமாகியுள்ள நிலையில், தற்போது தமிழக அரசு வெளியிட்டுள்ள கொரோனா கால வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பணிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.