திருநெல்வேலி மாநகர காவல்துறையின் குற்றம் மற்றும் போக்குவரத்து துணை கமிஷனராக இருந்த திரு.மகேஷ்குமார் அவர்களை சென்னைக்கு பணியிட மாற்றம் செய்தும், அவருக்கு பதிலாக திருப்பூர் மாநகர காவல்துறை துணை ஆணையாளராக பணியாற்றிய திரு.சுரேஷ்குமார் அவர்களை திருநெல்வேலி மாநகர புதிய துணை ஆணையாளராக நியமித்தும் தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.
தமிழக அரசின் இந்த உத்தரவுப்படி நேற்று திருநெல்வேலியின் புதிய காவல்துறை குற்றம் மற்றும் போக்குவரத்து துணை ஆணையாளராக திரு.சுரேஷ்குமார் அவர்கள் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு சக காவல்துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தார்கள். பதவியேற்றுக்கொண்ட திரு.சுரேஷ்குமார் அவர்கள், திருநெல்வேலி மாநகரில் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடியை தீர்ப்பதற்கும், மாநகரில் நடைபெறும் கொள்ளை, திருட்டு சம்பவங்களை தடுக்கவும், கொரோனா நோய்த்தொற்று பரவலை தடுக்கவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கூறினார்.