திருநெல்வேலியில் உள்ள ஹைகிரவுண்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், தமிழக அரசின் உத்தரவுப்படி ரெம்டெசிவிர் மருந்து விற்பனை துவங்கியது. இதுபற்றி மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பொது மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு சென்னைக்கு அடுத்தபடியாகத் திருநெல்வேலியில் மருந்து விற்பனை கடந்த சனிக்கிழமை முதல் துவங்கப்பட்டுள்ளது., இங்கு ரெம்டெசிவிர் ஊசி மருந்து 100 எம்.ஜி அளவுள்ள 6 குப்பிகள் ரூபாய் 9408 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த மருந்து தேவைப்படுவோர் மருத்துவரின் பரிந்துரை சீட்டு, சி.டி ஸ்கேன் அறிக்கை, ஆர்.டி.பி.சி.ஆர் அறிக்கை, நோயாளியின் ஆதார் கார்டு நகல், மருந்து வாங்க வருபவரின் ஆதார் கார்டு நகல் ஆகியவற்றை சமர்ப்பித்து பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாகத் திருநெல்வேலியிலும் இந்த மருந்துகள் விற்பனைக்கு வந்துள்ளதால் நோயாளிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.