திருநெல்வேலியில் நவீன ட்ரோன்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணி மாவட்ட ஆட்சித்தலைவர், மாநகராட்சி கமிஷனர் ஆகியோர் முன்னிலையில் தமிழக உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் மற்றும் சிறப்பு கண்காணிப்பு அதிகாரி ஆகியோரால் தொடங்கி வைக்கப்பட்டது. தமிழகத்தில் பரவி வரும் கொரோனா நோய்த் தொற்றை தடுக்கும் விதமாக மாநிலம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
சென்னையில் நெருக்கடி மிகுந்த பகுதிகளிலும், ஆட்கள் நுழைய முடியாத இடங்களிலும் கிருமிநாசினி தெளிக்கும் பொருட்டு அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள்மூலம் வடிவமைக்கப்பட்ட ஆளில்லா குட்டி ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டது. பெட்ரோல் மூலம் இயங்க கூடிய இந்த வகை ட்ரோன்கள், 16 லிட்டர் கிருமிநாசினியை தாங்கிக் கொண்டு பறக்கும் திறன் கொண்டது. இந்நிலையில் தற்போது சனிக்கிழமை அன்று திருநெல்வேலி மாநகரத்திலும் இந்த ஆளில்லா குட்டி ட்ரோன்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணி, என்.ஜி.ஓ காலனியில் உள்ள ஆர்.டி.ஓ அலுவலகம் பகுதியில் வைத்து துவக்கி வைக்கப்பட்டுள்ளது.