தென்காசி நகரில் உள்ள பிரசித்தி பெற்ற உலகம்மை உடனுறை காசி விசுவநாத சுவாமி கோவிலின் மாசி திருவிழா கடந்த 08/02/2022 அன்று கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வந்த நிலையில், தினமும் காலை மற்றும் இரவில் சிறப்பு அபிஷேகங்கள், மண்டகப்படி பூஜைகள் நடைபெற்று பஞ்சமூர்த்திகள் வீதி உலாவும் நடைபெற்று வந்தது, இந்த விழாவின் ஒன்பதாம் திருநாளான நேற்று (16/02/2022) தேரோட்டம் வெகு கோலாகலமாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் வடம் பிடித்து இழுக்க முதலில் சுவாமி தேரும் , அதனை தொடர்ந்து அம்மன் தேரும் நான்கு ரத வீதிகளில் உலா வந்து நிலையம் சேர்ந்தது. இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகம் செய்திருந்த நிலையில், காவல்துறையினர் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்கள்.