தமிழகம் முழுவதும் வரும் 19/02/2022 அன்று உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பணிகளில் ஈடுபடும் அரசு அலுவலர்கள், காவல்துறையினர் தபால் மூலம் தங்கள் ஓட்டுக்களை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் நடைபெற உள்ள தேர்தல் பணியில் ஈடுபடும் காவலர்கள் மற்றும் அரசு அலுவலர்களுக்கு தபால் வாக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த தபால் வாக்குகளை செலுத்த வசதியாக மாநகராட்சியில் தபால் வாக்கு பெட்டியும் வைக்கப்பட்டு உள்ளது. நேற்று முன்தினம் முதல் இந்த தபால் வாக்குபெட்டியில் அரசு ஊழியர்கள், காவலர்கள் தபால் வாக்குளை செலுத்தி வருகின்றனர். இந்த தபால் வாக்குகளை வாக்கு எண்ணிக்கை நாளான 22-ந் தேதி காலை 7 மணி வரை செலுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.