செய்திக்குறிப்புகள்:
மாவட்டத்தில் 1030 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
காவலர்கள் அனைவரும் விழிப்பாக இருக்க எஸ்.பி அறிவுரை.
தென்காசி மாவட்டத்தில் கடந்த 19/02/2022 அன்று நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற உள்ள நிலையில், மாவட்டம் முழுவதும் 3 ஏ.எஸ்.பிக்கள், 10 டி.எஸ்.பிக்கள், 24 இன்ஸ்பெக்டர்கள், 113 சப் இன்ஸ்பெக்டர்கள் என மொத்தம் 1030 காவலர்கள் தலைமையில் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் செங்கோட்டை நகராட்சியில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலின் வாக்கு பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள செங்கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு பணிகளை தென்காசி காவல்துறை கண்காணிப்பாளர் திரு.கிருஷ்ணராஜ் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் போது காவலர்கள் அனைவரும் விழிப்பாக இருக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்.
Image source: maalaimalar.com