செய்திக்குறிப்புகள்:
தாயார்களுடன் தெப்பத்தில் எழுந்தருளி வலம் வந்த பொலிந்து நின்ற பிரான்.
திரளான பக்தர்கள் பெருமாளை சேவித்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நவதிருப்பதி ஸ்தலங்களில் ஒன்றான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் திருக்கோவிலில் மாசித் திருவிழா கடந்த 12/02/2022 அன்று கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழாவின் ஒன்பதாம் திருநாளான நேற்று முன்தினம் 20/02/2022 மாசி தேரோட்டம் விமரிசையாக நடைபெற்ற நிலையில், பத்தாம் திருநாளான நேற்று 21/02/2022 இரவு தெப்பத் திருவிழா நடைபெற்றது.
தெப்பத் திருவிழாவை முன்னிட்டு நேற்று அதிகாலை 4.00 மணிக்கு திருக்கோவில் நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், 6.00 மணிக்கு திருமஞ்சனமும், அலங்கார தீபாராதனையும் நடைபெற்றது. இதனை தொடர்ந்து மாலை திருக்கோவிலில் இருந்து தாயார்களுடன், பொலிந்து நின்ற பிரான் புறப்பட்டு, தெப்பக்குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தேரில் இரவு சுமார் 7.00 மணியளவில் எழுந்தருள, தெப்பத்திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை சேவித்தனர்.
Image source: dailythanthi.com