- திருநெல்வேலி மாவட்டம் தபால் நிலையங்களில் தேசியக்கொடிகள் கிடைப்பதற்கு தட்டுப்பாடு ஏற்பட்டு ஏற்பட்டுள்ளது.
- தேசியக்கொடி தட்டுப்பாட்டால் பொதுமக்கள் கடைகளில் அதிக விலைக்கு வாங்க வேண்டிய சூழ்நிலை அதிகரித்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் தபால் நிலையங்களில் தேசியக்கொடி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது அதனால் மக்கள் பொதுமக்கள் கடைகளில் அதிக விலை கொடுத்து தேசியக் கொடிகள் வாங்கும் சூழ்நிலை உள்ளது
இந்தியாவில் 75வது சுதந்திர தின விழா வருகின்ற ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி திங்கட்கிழமை அன்று கொண்டாடப்படுகின்றது. 75 ஆவது இந்திய சுதந்திர தினம் என்பதால் தங்கள் வீடுகளில் தேசியக்கொடி ஏற்றி கொண்டாடவும் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
இடைத்தொடர்ந்து தபால் நிலையங்களில் தேசியக்கொடி விற்கவும் அரசு ஏற்பாடு செய்திருந்தது. ஒரு கொடியின் விலை 25 ரூபாய் என அறிவிக்கப்பட்டிருந்தது. மக்கள் ஆர்வத்துடன் வந்து தபால் நிலையத்தில் தேசியக்கொடிகள் வாங்கிச் சென்றனர்.
நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள தபால் நிலையத்தில் ஓரிரண்டு நாட்களில் அனைத்து கொடிகளும் விற்று விட்டன. தபால் நிலையங்களில் கடந்த இரண்டு நாட்களாக கிடைக்கவில்லை . அதனால் தேசியக்கொடி கிடைக்காது மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
இந்த வருடம் தேசிய கொடிகள் மிகவும் குறைந்த அளவில் விற்பனைக்கு வந்துள்ளது. மக்கள் அனைவரும் அதிக அளவில் வாங்கிச் சென்றுள்ளனர். குறைந்த அளவு தேசியக்கொடிதான் இருக்கின்றது . அதனால் இனி பொது மக்களுக்கு தேசிய கொடிகள் விற்பனை செய்வது சாத்தியம் இல்லை . பொதுமக்கள் பலர் தினமும் தபால் நிலையத்திற்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்வது வருத்தம் அளிக்கிறது ' என்று தபால் துறையில் அதிகாரிகள் கூறுகின்றனர்.
மக்களுக்கு உள்ள ஆர்வத்தின் காரணமாக 75 ஆண்டு சுதந்திர தின விழாவை மிகவும் சிறப்பாக கொண்டாட அனைவரும் விரும்புகின்றனர் அதனால் கடைகளில் அதிக அளவில் விலை கொடுத்து தேசியக்கொடி வாங்கும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.
Image source: dailythanthi.com