செய்திக்குறிப்புகள்:
- நெல்லை மாவட்டம் வள்ளியூரில் சிட்கோதொழிற்பேட்டை விரைவில் தொடங்கப்படும் என்று த.மோ அன்பரசன் தகவல்.
- நெல்லை மாவட்டம் வள்ளியூரில் ரூ 52.72 கோடி மதிப்பீட்டில் 504 வீடுகள் கட்டுவதாகவும் திட்டமிடப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் 52.72 கோடி மதிப்பீட்டில் 504 வீடுகள், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் கட்டப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
தலா ரூபாய் 10 .46 லட்சம் மதிப்பீட்டில் இந்த வீடுகள் கட்டப்படும் . மத்திய அரசின் மூலம்1. 50 லட்சம் மற்றும் மாநில அரசின் மூலம் 7 லட்சம் ரூபாயும் மானியமாக வழங்கப்பட்டு வருகிறது. பயனாளிகள் சார்பில் ரூபாய் 1.96 லட்சம் பங்களிப்பு செய்கின்ற நிலையில் இந்த திட்டம் கூடிய விரைவில் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் தா.மோ. அன்பரசன் தெரிவித்தார்.
வள்ளியூர் நகர பஞ்சாயத்துக்குட்பட்ட தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் குடியிருப்பு பகுதியின் வடக்கு பக்கத்தில் உள்ள இடம், வீடுகள் கட்டுவதற்காக தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றது.
சபாநாயகர் அப்பாவு , அமைச்சர் தா.மு. அன்பரசன் நேரில் சென்று பார்வையிட்டனர். பிறகு வள்ளியூரில் அமைந்துள்ள சிட்காட் தொழிற்பேட்டை மற்றும் டான்சி இடங்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அப்பொழுது அமைச்சர் தா. மு. அன்பரசன் கூறியதாவது;
.
சிட்கோ தொழிற்பேட்டை அமைப்பது பற்றிய செயலாக்கம் முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது , அதன்படி இந்த திட்டம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்பட உள்ளது.
பணகுடி நகர பஞ்சாயத்து பகுதிகளில் ரூபாய் 49 . 14 கோடி மதிப்பீட்டில் வீடு கட்டும் திட்டம் செயல்படுத்த இருக்கின்றது. வள்ளியூர் டான்சிமில் 3.6; ஏக்கர் இடத்தில் மூன்று கட்டிடங்கள் இருக்கின்றன.
அதில் தொழில் தொடங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் வள்ளியூரில் 100 ஏக்கர் பரப்பளவில் சிட்கோ தொழிற்பேட்டை தொடங்கப்பட இருக்கிறது. படித்த இளைஞர்கள் பயன் தரக்கூடிய தொழிற்பயிற்சி மையங்கள் விரைவில் அமைக்கப்படும் என்றும் தா.மோ. அன்பரசன் தெரிவித்தார்.
அரசு அதிகாரிகள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் பலர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
Image source: dailythanthi.com