திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகா தேவியில் உள்ள அருள்மிகு வடக்குவாச் செல்லியம்மன் கோவிலில் மிகவும் கோலாகலமாய் முளைப்பாரி திருவிழா நடைபெற்றது.
.
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருள்மிகு வடக்குவாச் செல்லியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தந்த வண்ணம் இருப்பர் . திருவிழா சமயங்களில் சுற்றி இருக்கும் அனைத்து பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகை புரிந்து சுவாமியை தரிசனம் செய்வார்கள்.
இந்த வருடமும் வடக்கு வாச்செல்லியம்மன் கோவிலில் முளைப்பாரி திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது . திங்கட்கிழமை அன்று தொடங்கிய இத்திருவிழாவில் அம்பாளுக்கு தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சிறப்பு அபிஷேகம் தீபாராதனை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
செல்லியம்மனை வேண்டிக்கொண்டு நேர்த்திக்கடன் செலுத்த பெண்கள் விரதம் இருந்து முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்றனர். தாமிரபரணி ஆற்றங்கரைக்கு சென்று முளைப்பாரியை தண்ணீரில் இட்டு தங்களுடைய நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.
மேலும் கோவிலில் தொடர்ந்து சிறப்பு பூஜைகள் , வரும் பக்தர்களுக்கு அன்னதான நிகழ்வு அனைத்தும் நடைபெற்றன. முளைப்பாரி திருவிழாவிற்கு வருகை புரிந்த பக்தர்கள் ஏராளமானோர் சுவாமியை தரிசனம் செய்து , முளைப்பாரி நேர்த்திக் கடனை நிறைவு செய்தனர். கோவிலின் திருவிழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மிகவும் சிறப்பாக செய்திருந்தனர்.