தமிழகத்தில் வரும் 19/02/2022 அன்று உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பொதுமக்கள் அனைவரும் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக மாநிலத்தில் உள்ள அனைத்து ஊர்களிலும், காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று திருநெல்வேலி மாநகரில் உள்ள சந்திப்பிள்ளையார் கோவில் முன்னர் தொடங்கி, தச்சநல்லூர் சந்திமறித்தம்மன் கோவில் வரை காவலர்களின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. இந்த அணிவகுப்பை திருநெல்வேலி மாநகர மேற்கு மண்டல காவல்துறை துணை ஆணையாளர் திரு.சுரேஷ்குமார் அவர்கள் தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.