பாளையங்கோட்டையில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் நேற்று காவலர்களின் குடும்பத்தினருக்கு தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமை நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி.யும், மாநகர போலீஸ் கமிஷனருமான திரு. பிரவின்குமார் அபிநபு அவர்கள் தலைமை தாங்கி துவக்கி வைத்து, அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்வதன் மூலம் மட்டுமே கொரோனா நோய்த்தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும், எனவே அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொண்டு பயனடைய வேண்டும் என்று உரையாற்றினார்.
இந்த சிறப்பு முகாமில் நெல்லை மாநகரம் மற்றும் மாவட்டத்தில் இதுவரை தடுப்பூசி போட்டுக்கொள்ளாத காவலர்கள் மற்றும் அவர்களுடைய குடும்ப உறுப்பினர்கள், அமைச்சுப்பணியாளர்கள் மற்றும் சிறப்பு பிரிவு காவலர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.