திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோவிலில் உள்ள நெல்லை கோவிந்தர் மூலவர் திருமேனியில் பின்னம் ஏற்பட்டிருக்கும் நிலையில், அதனை சரி செய்யும் பொருட்டு திருக்கோவில் நிர்வாகம் திருப்பணிகள் துவங்க முடிவு செய்துள்ளது. இதனை முன்னிட்டு நேற்று நெல்லை கோவிந்தருக்கு பாலாலய பூஜைகள் சிறப்பாக நடைபெற்றது. இந்த பூஜை முன்னதாக நேற்று அதிகாலை விநாயகர் அனுக்கையுடன் துவங்கி, கணபதி ஹோமம், பூர்ணாகுதியுடன் நிறைவு பெற்றது. பின்னர் பாலாலய மூர்த்தத்துக்கு சிறப்பு அபிஷேங்கள் செய்யப்பட்டு, அலங்கார தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.