தென்காசி மாவட்டம்., ஊத்துமலை அருகே உள்ள நொச்சிகுளம் கிராமத்தின் வயல் வெளியில் பிற்கால பாண்டியர் கால கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல் அறிந்த தொல்லியல்துறை பேராசிரியர்கள், மேற்கொண்ட ஆய்வில் 1268 -1312 ஆண்டுகளில் ஆட்சி செய்த மாறவர்மன் குலசேகர பாண்டியனின் `தான கல்வெட்டு' என்று கண்டறியப்பட்டுள்ளது. சுமார் 4 அடி உயரத்தில் கோணிக்கல் வடிவத்தில் அமைந்துள்ள அந்த கல்வெட்டில் 19 வரிகள் உள்ளன. அதில் இடம்பெற்ற எழுத்துகள் தமிழில் உள்ளது. இதுபோன்று தமிழகத்தில் இதுவரை 15 கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.