கொரோனா நோய்த்தொற்று அதிகமாக பரவியதால், அதனை கட்டுப்படுத்தும் விதமாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது தென்மாவட்டங்களில் ஓரளவு நோய்த்தொற்று குறைந்துள்ள நிலையில் தமிழக அரசு அந்த மாவட்டங்களுக்கு ஊரடங்கில் சில தளர்வுகளை விதித்துள்ளது. இன்று முதல் இந்த தளர்வு நடவடிக்கைகள் செயல்பாட்டுக்கு வரும் நிலையில், திருநெல்வேலி மாநகரில் உள்ள அரசு அனுமதிக்கப்பட்ட கடைகள் இன்று திறக்கப்படுகின்றன.
திருநெல்வேலி மாநகரில், அரசாங்கம் அனுமதி அளித்துள்ள காய்கறி கடைகள், பழக்கடைகள், பூ விற்பனை செய்யும் நடைபாதை கடைகள், மின்பொருட்களை விற்பனை செய்யும் எலக்ட்ரிக்கல் கடைகள், ஹார்டுவேர் கடைகள், வாகன உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் ஆட்டோமொபைல்ஸ் கடைகள், இருசக்கர வாகனம் பழுது நீக்கும் கடைகள், கல்வி புத்தகங்கள் மற்றும் எழுத்து உபகரணங்கள் விற்பனை செய்யும் ஸ்டேஷனரி கடைகள் காலை மணி முதல் மாலை மணி வரை திறக்கப்படும். மேலும் வாடகை வாகனங்களான கால் டாக்ஸி, ஆட்டோக்களில் பயணிகள் இன்று முதல் இ-பாஸ் பெற்று பயணம் செய்துகொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த தளர்வுகளை அரசாங்கம் விதித்துள்ள கட்டுப்பாடுகளை பின்பற்றி பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.