திருநெல்வேலி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி எங்கே சென்று போட்டுக்கொள்ளலாம் என்றும் கொரோனா சிகிச்சை அளிக்கும் மையங்களின் விவரங்களையும் எளிதில் தெரிந்து கொள்ள உதவும் வகையில் தமிழகத்தில் முதல் முறையாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் சார்பாக புதிய இணையதள பக்கம் துவங்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்ட மக்கள் https://covidcaretirunelveli.in/ என்ற இணையதள முகவரியில் மேற்கண்ட தகவல்களை எளிதில் தெரிந்து கொள்ளலாம்.
இந்த இணையதள பக்கத்தில் தடுப்பூசி போடும் மையங்களின் விவரம் ,மாதிரி சேமிப்பு மையங்களின் விவரம், பரிசோதனை மையங்களின் விவரம், சிகிச்சை மையங்களின் விவரம் மற்றும் கோவிட் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் உள்ளது. இந்த இணையதளத்தை பயன்படுத்தி வீட்டில் இருந்தபடியே அனைத்து தகவல்களையும் பொதுமக்கள் எளிதாக தெரிந்து கொள்ளலாம் என்றும் பொதுமக்கள் இந்த இணையதள பக்கத்தை பயன்படுத்தி கொரோனாவில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள தேவையான நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.விஷ்ணு அவர்கள் தெரிவித்துள்ளார்.