திருநெல்வேலி மாநகரில் கொரோனா நோய் தொற்று பரவலாக பரவி வரும் நிலையில், கொரோனாவுக்கு சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மாநகரில் உள்ள திருமண கூடங்கள், கல்வி நிறுவனங்கள் ஆகியவை தற்காலிக கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றன.
திருநெல்வேலி மாநகரில் உள்ள இந்த கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் பற்றியும், வழங்கப்படும் உணவு வகைகள் பற்றியும், அங்கு பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் ஆகியோர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள் பற்றியும் இணையதள சேவை மூலம் ஏற்படுத்தப்பட்ட காணொளி காட்சி வழியாக கேட்டறிந்து திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.விஷ்ணு அவர்கள் நோயாளிகள் மற்றும் மருத்துவர்கள் உடன் கலந்துரையாடினார்.
இதுபோல மேலும் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கொரோனா சிகிச்சை மையங்களில் இணையதள சேவை செய்யப்பட்டு தினமும் காணொளி காட்சி மூலம் மாவட்ட ஆட்சித்தலைவர் கலந்துரையாட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.